maxassociate

Lotus Panjakavya vilakku

பஞ்சகவ்யா விளக்கு – தாமரை வடிவம்

Share it

Description

Vilaku – Panchakavyam

பணப்புழக்கத்தை அதிகரிக்கும் பஞ்சகவ்ய விளக்கு..!
தீய சக்திகள் நம்மை விட்டு அகலவும், நன்னைகள் நடைபெறவும், தோஷ நிவர்த்திக்காகவும் நாம் ஹோமங்கள் செய்கின்றோம்.
நன்மை நடைபெற, காரிய சித்தி ஆக பல பூஜைகள், பரிகாரங்கள், தோஷ நிவர்த்திகள் செய்கிறோம்.
ஆனால் உண்மையில் பூஜை, ஹோமங்கள் செய்வதன் நோக்கம் பஞ்சபூதங்களின் அருள் கிடைக்கவும், கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்கவும் தான்
ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது வருடத்திற்கு ஒரு முறையோ ஹோமங்கள் செய்வது குடும்ப வாழ்க்கைக்கு மிகவும் நன்மையை கொடுக்கிறது.
வீட்டிலிருக்கும் துன்பங்கள், கஷ்டங்கள், கண் திருஷ்டிகள், மனக்கஷ்டங்கள் அனைத்தையும் தீர்த்து வளமான வாழ்வை ஹோமங்களின் மூலம் பெறலாம்.
ஹோமம் என்றாலே அதிகமானவர்கள் வீடுகளில் செய்வது கணபதி ஹோமம் மட்டும் தான். மற்ற ஹோமங்கள் பொதுவாக ஆலயங்களில் மட்டுமே நடத்தப்படுவது வழக்கம்.
ஹோமங்களில் மிக முக்கியமானதும், அதிக சக்தி வாய்ந்ததாகவும் சொல்லப்படுவது 3 ஹோமங்கள் தான்.
கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், சத்ருசம்ஹார ஹோமம் ஆகியனவாகும்.
ஆனால் வீட்டில் ஹோமம் செய்வதற்கு இணையான பலன்களை கொடுக்கக்கூடியது பஞ்சகவ்ய விளக்கு.
வீட்டில் பஞ்சகவ்ய விளக்கில் தீபம் ஏற்றும் போது அதிலிருந்து வரும் புகையின் வாசம் ஹோமத்திலிருந்து வரும் வாசத்திற்கு நிகரானதாக இருக்கும்.
பஞ்சகவ்ய விளக்கிலிருந்து வரும் புகை வீடு முழுவதும் பரவ செய்து வீட்டில் இருக்கும் எல்லா எதிர்மறை ஆற்றல்களையும் வெளியேற்றி பணப்புழக்கத்தை அதிகரிக்க செய்யும்
பஞ்சகவ்ய விளக்கானது பசுவில் இருந்து கிடைக்கும் பால், நெய், கோமியம், தயிர், சாணம் ஆகிய 5 பொருட்களுடன் சில மூலிகைகள் சேர்த்து செய்யப்படுகிறது.
பசு மாட்டில் முப்பத்து முக்கோடி தேவர்களும் வாசம் செய்வதாக ஐதீகம். அதுவும் பால், நெய், தயிர் போன்றவற்றில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்
பஞ்சகாவிய விளக்கு ஏற்றுவதால் ஏற்படும் நன்மைகள்
வீட்டின் எதிர்மறை ஆற்றல்களை அடியோடு வெளியேற்றி சண்டை, சச்சரவுகளை நீக்கும். நேர்மறை ஆற்றல்களை நிரம்பி, லட்சுமி கடாட்சம் நிறைய செய்யும்.

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “Lotus Panjakavya vilakku”

Your email address will not be published. Required fields are marked *